top of page

மனக் கோளாறுகளை போக்க வேண்டுமா?மூச்சுக் காற்று சிறந்த கருவி!

Updated: Jan 22

மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு;

மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை;

மன்மனத்து உள்ளே மகிழ்ந்துஇருப் பார்க்கு

மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே.


(திருமந்திரம் 620)


மனம் அலைபாய்ந்து கொண்டு, மன எழுச்சி (emotion) அதிகம் இருக்கும்போது, மூச்சுக் காற்று அதிகரித்து இருப்பது நன்கு தெரியும். மனம் ஒடுங்குகிற போது, மூச்சுக் காற்று மாறி அடங்கி ஒழுங்குக்கு வருகிறது. புறப்பொருள்களைப் பற்றி அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனத்தையே பற்றி மனத்துக்குள்ளேயே ஒடுங்கி மகிழ்ந்து இருப்போர்க்கு, நஞ்சுக்கு நஞ்சே மருந்தாவதுபோல, மனத்தை மனமே வசப்படுத்த முடியும். நேரடியாக மனத்தினைக் கட்டுப்படுத்த முடியாததால், மூச்சுக்காற்றினைக் கவனிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. மனம் மூச்சுக்காற்றினை கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது மூச்சுக்காற்று தன்னுடைய இயல்பான நுண்ணிய நிலைக்கு மாறுகிறது. மூச்சுக்காற்றுக்கும் மனதின் நிலைப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் வன்முறையான (violent), கட்டுப்பாடற்ற எண்ணங்களுடன் ஆர்ப்பரித்து நிற்கையில் மூச்சுக் காற்றின் வேகம் அதிகரித்து நிற்கும். மனம் நன்கு அடங்கி இருக்கையில் மூச்சுக்காற்று தன்னுடைய இயல்பான நுண்ணிய நிலைக்கு வந்து விடும். மனத்தினை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், மூச்சினை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மூச்சினை தொடர்ந்து நுண்ணிய நிலைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குண்டான அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையில் தொடர்ந்து இருக்க முடியும். அப்பொழுது மனது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


மன்மனம் - அலைபாயும் மனம்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page