ஆழ்மனத்தை அறிந்து கொள்வோம்...
- Dr. Sivakumar
- Dec 31, 2024
- 1 min read
ஆழ் மனது:
கருவணு அல்லது நுகம் (Zygote cell) என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு ஆகும். உயிரினங்களில் இந்த உயிரணுவே வாழ்க்கைச் சக்கரத்தின் தொடக்க நிலையாகும். அத்துடன் இது இரு பெற்றோரில் இருந்தும் மரபியல் தகவல்களைப் பெற்றிருக்கும். இந்த உயிரணு( zygote என்ற cell)வுடன் universal consciousness என்ற பிரபஞ்ச ஆற்றல் இணைந்து ஒரு மனிதனை உருவாக்குகிறது. இதைத்தான் ஆழ் மனது என்றும், ஆன்மா என்றும் இறையாற்றல் என்றும் சித்தர்கள், வேதாத்திரி மகரிஷி மற்றும் வேதங்கள் மூலம் அறியப்பெறுகிறோம். இது மிகச் சிறந்த ஆற்றல். இதன் செயல்பாடுகள் இறையியலை நோக்கி இருக்கின்றன. இறையியல் என்பது விருப்பு வெறுப்பற்ற சமநிலையுடன் கூடிய மனது, எல்லையற்ற அன்பு, கருணை, மகிழ்ச்சி, நிம்மதி, தைரியம், தன்னம்பிக்கை, அனைவரையும் அரவணைத்து வாழ்தல் இவற்றை இயல்பாகக் கொண்டுள்ளது.
.png)



Comments