
ஆழ்மனத்தினைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், உள்ளம் ஆன்மா மற்றும் இறையாற்றல் என்று பல்வேறு பெயர்களில் கூறுவது...
- Dr. Sivakumar
- Dec 27, 2024
- 1 min read
1.கோவில் முழுதும் கண்டேன்-உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான்-தோழி
தேடியும் கண்டிலனே.
2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி
ஏழையான் கண்டிலனே.
3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல
சித்திர வேலை கண்டேன்
அற்புத மூர்த்தியினைத்-தோழி
அங்கெங்கும் கண்டிலனே
4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்
பொங்கு பூ மாலை கண்டேன்
என்னப்பன் எம்பிரானைத்-தோழி
இன்னும் யான் கண்டிலனே.
5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்
ஆபத்தில் காப்பவனைத் தோழி
அங்கே யான் கண்டிலனே.
6.தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்
சிற்றம் பலமும் கண்டேன்
கல்லைக் கணிசெய்வோனைத் தோழி
கண்களால் கண்டிலனே.
7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே-தோழி
பயனொன் றில்லையடி.
8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்
உள்ளேயும் காண்பாய் அடி.
Comments