Want to become a Noble and Saintly person?
- Dr. Sivakumar
- Jan 23
- 1 min read
First one must accept the fact of suffering. Everywhere suffering exists; this is a universal truth. But it becomes a noble truth when one starts observing it without reacting, because anyone who does so is bound to become a noble, saintly person
Teaching of Buddha
முதலில் ஒருவர் துன்பப்படுகிறார் (suffering) என்றால், தான் துன்பப்படுகிறோம் என்ற அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று எல்லா இடங்களிலும் துன்பம் உள்ளது என்ற உண்மையை அவர் அறிந்து கொள்ள வேண்டும். இது ஓர் உலகளாவிய உண்மை. எப்பொழுது ஒருவர் எதிர்வினையாற்றாமல் விருப்பு வெறுப்பற்ற, சமநிலையான மனத்துடன் அதைக் கவனிக்கத் தொடங்குகிறாரோ அது ஓர் உன்னதமான (noble) உண்மையாகிறது, அப்படி அவர் அந்தத் துன்பத்துடன் இணையாமல் ஒதுங்கி நின்று கவனிக்கத் தொடங்கும் போது, அந்தத் துன்பம் அதன் இயல்பான 'தோன்றி அழியக்கூடிய' குணத்துடன் மறைந்து விடுகிறது. அப்பொழுது எந்தத் துன்பமும் அவரை அண்டுவதில்லை. இவ்வாறு செய்யும் எவரும் ஓர் உன்னதமான, புனிதமான நபராக மாறுகிறார்.
Comments