Visualisation, Mindful meditation, Hypnotism
- Dr. Sivakumar
- Dec 23, 2024
- 1 min read
Updated: Dec 24, 2024
ஆற்றல் வாய்ந்த அந்த ஆழ்மனதினை அணுகுவதற்கும், மற்றும் ஆழ்மனதிற்குக் கட்டளையிட்டு நம்முடைய கனவுகளை ஆழ்மனதில் பதிவு செய்து நாம் நினைத்ததை அடைவதற்கும், உளவியலாளர்கள் மூன்று வழிமுறைகளைக் கண்டுள்ளார்கள். அவை…
காட்சிப்படுத்துதல் என்ற Visualisation
மன விழிப்புணர்வு தியானம் என்ற Mindful meditation
அறிதுயில் என்ற Hypnotism
மூன்று வழிமுறைகளில் ஒன்றான, அறிதுயில் என்ற ஹிப்னாடிசக் கலையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அனுபவத்தினை என்னால் பெற முடிந்தது. ஆரம்ப காலத்தில், மேற்கத்திய ஹிப்னாடிசக் கலையில் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பிறகு, நமது சித்தர்களின் வழிமுறைகள், அவர்கள் மனித குலத்திற்கு ஆற்றிய பங்கு இவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது, ஆழ்மனதின் ஆற்றலைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. 'அட்டமா சித்திகள்' என்று சித்தர்கள் அறிமுகப்படுத்திய அணிமா, மகிமா, கரிமா முதலான எட்டு 'சித்தி'களும், ஆழ்மனதின் தன்மைகள் மற்றும் ஆற்றல்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அத்தகு ஆழ்மனதின் ஆற்றலை ஆராய்ச்சி செய்து, அதன் வியத்தகு பரிமாணங்களைக் கண்டுபிடித்து, அதன் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு உருவாகியது தான்
Holistic Mesmerism and Hypnotism என்ற course.
Comments