Dr.S.Sivakumar, B.E., M.B.A., M.Sc.(App.Psy), P.G.D.Y.(Yoga), Ph.D.(Acu), F.R.C.P.(M.A.), F.I.V., M.I.E., M.I.I.P.A. Consultant Psychologist and Hypnotist Course Director
- Dr. Sivakumar
- Dec 21, 2024
- 1 min read

19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது என்றால் அது ஆழ்மனதின் அற்புத ஆற்றல் என்று சொல்லலாம்.
இந்த ஆழ்மனதின் அற்புத ஆற்றலை தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ வாழ்க்கையில் பயன்படுத்தியவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக உருவாகி இருக்கிறார்கள்.
பல பேர் ஆழ்மனதின் அற்புத ஆற்றலை ஆராய்ச்சிகள் மூலமும், அனுபவங்களின் மூலமும் கண்டுபிடித்து ஊடகங்கள் வாயிலாக அவற்றை வெளியிட்டுள்ளனர். இருந்தும் ஆழ்மனது ஒரு கடலைப் போன்றது. அதன் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. அதைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இவ்வளவு ஆற்றல் வாய்ந்த அந்த ஆழ்மனதினை அணுகுவதற்கும், மற்றும் ஆழ்மனதிற்குக் கட்டளையிட்டு நம்முடைய கனவுகளை ஆழ்மனதில் பதிவு செய்து நாம் நினைத்ததை அடைவதற்கும், உளவியலாளர்கள் மூன்று வழிமுறைகளைக் கண்டுள்ளார்கள். அவை என்ன என்று அடுத்த பதிவில் காண்போமா?
- தொடரும்
.png)



Comments